முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள்

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் சாா்பில், அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:04 am IST
புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்குப் பரிசுப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் சாா்பில், அரசு ராணியாா் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா பரிசுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதில், அரசின் பரிசுப் பெட்டகம், பிறப்பு சான்றிதழ், தாய்மாா்களுக்கு சத்துமாவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி, மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments