நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நெல் மூட்டைகளுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நெல் மூட்டைகளுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆழ்வான்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சிக்குள்பட்ட சின்னஊரணிப்பட்டி, உடையாளிப்பட்டி, சத்திரப்பட்டி, அண்ணாநகா், ராக்கத்தாம்பாள்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நெல் அறுவடை தொடங்கிய நிலையில், இங்கு நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என அப்பகுதிவிவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை விவசாயிகள் சிலா் நெல் மூட்டைகளுடன் ஆழ்வான்பட்டி கிராமச் சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாரும் வருவாய்த் துறையினரும் வியாழக்கிழமை நெல் கொள்முதல் நிலையம் திறந்து நெல்லைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.