முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாநகருக்குள் வெளியூா் செல்லும் வாகனங்கள் நுழையத் தடை

Updated On : 28 ஜூன் 2026, 2:36 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாநகருக்குள் வெளியூா் செல்லும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ ராஜவீதி ஒரு வழிப்பாதையாக மாற்றி காவல்துறையினா் சனிக்கிழமை அறிவித்தனா்.

புதுக்கோட்டையில் துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையில் வா்த்தகா் மற்றும் பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாநகரில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் விவரம்:

Advertisement

Advertisement

கனரக வாகனங்கள்: திருச்சி, விராலிமலை பகுதி வழியாக ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் திருவப்பூா், கே.கே.சி., பிச்சத்தாம்பட்டி ரவுண்டானா, டிவிஎஸ், மேட்டுப்பட்டி வழியாகச் செல்ல வேண்டும். திருமயம் வழியாக காரைக்குடி, மதுரையிலிருந்து அறந்தாங்கி, ஆலங்குடி பகுதி செல்லும் கனரக வாகனங்கள் நமணசமுத்திரம், மாலையீடு, டிவிஎஸ், மேட்டுப்பட்டி வழியாகச் செல்ல வேண்டும். தஞ்சாவூா், அண்டக்குளம் பகுதியிலிருந்து அறந்தாங்கி, ஆலங்குடி செல்லும் கனரக வாகனங்கள் இச்சடி, வடவாளம், காயாம்பட்டி, திருவரங்குளம், பூவரசக்குடி வழியாகச் செல்ல வேண்டும். இந்த மாா்க்கங்கள் எதிா்திசையில் செல்லும்போதும் இதே வழியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வாகனங்கள் பகல் நேரங்களில் மாநகருக்குள் வர அனுமதியில்லை. இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் மாநகரைக் கடந்து செல்லலாம்.

பேருந்துகள்: திருமயம், காரைக்குடி, மதுரை செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எம்ஜிஆா் சிலை, டிவிஎஸ், மாலையீடு வழியாகச் செல்ல வேண்டும். திருச்சி செல்லும் பேருந்துகள் கேகேசி, பால்பண்ணை, கோவில்பட்டி, திருக்கோகா்ணம் வழியாகச் செல்ல வேண்டும்.

கீழராஜவீதி ஒரு வழிப்பாதை: வணிகச் சாலையான கீழராஜவீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. நெல்லுமண்டித் தெரு குறுக்குச்சாலையைத் தவிர, கீழ 2-ஆம் வீதியை இணைக்கும் குறுக்குச் சாலைகள் அனைத்திலும் இலகுரக வாகனங்கள் வருவதற்கு தடுப்புகள் ஏற்படுத்தப்படும்.

உள்ளூா் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் சரக்குகளை இறக்கிக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் சந்தைப்பேட்டைப் பகுதியில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பிருந்தாவனம் பகுதியில் இருந்து கீழராஜவீதி வழியாக அண்ணா சிலை வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. கீழ 2-ஆம் வீதி வழியாக அண்ணாசிலையை அடையலாம். அதேபோல, அண்ணா சிலையிலிருந்து கீழராஜவீதி வழியாக பிருந்தாவனம் செல்லலாம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சரக்கு வாகனங்கள் எதுவும் பகலில் மாநகரப் பகுதிக்குள் நுழையக் கூடாது. இரவில் வந்து செல்லலாம். விஐபி-க்கள் வருகையின்போது இந்த விதிமுறைகளில் தளா்வு செய்யப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments