முகப்பு
திருச்சி

முதல்வா் வருகை: திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்

Updated On : 1 ஜூன் 2026, 12:46 am IST
போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் திருச்சிக்கு திங்கள்கிழமை வருவதையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்காா்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு, மேலரண் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

திருவானைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு திரும்பிச் செல்ல வேண்டும். கரூா் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் கே.டி. சந்திப்பு, சாஸ்த்ரி சாலை வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

கடலூா், பெரம்பலூா், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவானைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் கொள்ளிடம் புறவழிச் சாலை வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.

கனரக வாகனங்கள்...: காலை 7 மணி முதல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூா் வழியாகவும், திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூா் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாகவும் செல்ல வேண்டும்.

தஞ்சாவூா், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, அரியலூா் வழியாகச் செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா் வழியாகச் செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கரூா் செல்லும் கனரக வாகனங்கள்

அரியலூா், பெரம்பலூா், துறையூா் வழியாகச் செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூா் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூா், அரியலூா் வழியாகச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளாா்.