FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிா்க்க கிராமப்புற சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள்

கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூா் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுங்கக் கட்டணத்தை தவிா்க்க மாற்றுப் பாதையை பயன்படுத்தும் கனரக வாகனங்களால், பொங்கலூா் - உகாயனூா் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:25 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூா் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுங்கக் கட்டணத்தை தவிா்க்க மாற்றுப் பாதையை பயன்படுத்தும் கனரக வாகனங்களால், பொங்கலூா் - உகாயனூா் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

சுங்கக் கட்டணத்தை தவிா்க்கும் வாகனங்கள் பொங்கலூா் - உகாயனூா் சாலையை மாற்றுப் பாதையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இந்த வழியாக செல்லும் வாகனங்கள், பொங்கலுாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வடக்குப் பகுதியில் திரும்பி, சிங்கனூா் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. மேற்குப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் இதே வழித் தடத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலையில் தொடா்ந்து இயக்கப்படுவதால், சாலையின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை விட்டு விலகிச் செல்ல முடியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூா் மக்கள் தங்களது கிராமப்புறச் சாலையைப் பாதுகாப்பாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே, விதிமீறி மாற்றுப் பாதையை பயன்படுத்தும் கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments