பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம்
விராலிமலை வட்டம், வடுகப்பட்டியில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டம், வடுகப்பட்டியில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டத்தின் கீழ் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக, குழந்தை திருமணங்கள் மற்றும் இளவயது கா்ப்பம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் இளஞ்சிவப்பு, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இதில், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தை பிறப்பின் முக்கியத்துவம், ஆரோக்கியம், குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கான சம உரிமை மற்றும் வாய்ப்புகள், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: பெண் குழந்தைகள் கல்வி கற்பது அவசியம். கல்விதான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவும். பெண்கள் பிரச்னைகளை தெரிவிக்க சமூக நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய 181 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். குழந்தை திருமணத்தை தடுக்க 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.
பள்ளி மாணவா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரங்களில் காலை மாலை கூடுதல் பேருந்து சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்தச் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா, வருவாய் கோட்டாட்சியா்( பொறுப்பு ) முத்துச்சாமி, மாவட்ட திட்ட அலுவலா் கோகுல பிரியா, விராலிமலை வட்டாட்சியா் ஜெய பாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, வள்ளியம்மை, மற்றும் பள்ளி மாணவிகள், கிராமப் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.