முகப்பு
புதுக்கோட்டை

தொழிலாளா் நல வாரியப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

Updated On : 30 மே 2026, 2:42 am IST
புதுக்கோட்டை தொழிலாளா் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பகிர்:

புதுக்கோட்டையில் தொழிலாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த, மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ், தொழிலாளா் வாரியப் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம், அமலாக்கம்) அலுவலகத்தை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

அப்போது, தொழிலாளா் நல வாரியத்தின் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவி, ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியின்போது, கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஏ. திவ்யநாதன், உதவி ஆணையா்கள் ஏ. கௌரி, ப. தங்கராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.