சியாமா சாஸ்திரிக்கு இசை அஞ்சலி
தஞ்சாவூர் மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பிறந்த நாளையொட்டி இசை அஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பிறந்த நாளையொட்டி இசை அஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராம. கெüசல்யா பேசியது:
சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் சியாமா சாஸ்திரிகள் பிறந்தார். கர்நாடக இசையில் புலமை பெற்ற இவர் காமாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் உரிமை பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவர். தேவி உபாசகரான இவருடைய கீர்த்தனைகள் பக்தியின் உயரிய நிலையில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இவர் பாடிய கீர்த்தனைகளில் பெரும்பாலானவை இங்கு காமாட்சி அம்மன் முன் அமர்ந்து பாடப்பட்டவை. எனவே, இந்த நாளில் இசை அஞ்சலி நடத்தப்படுகிறது என்றார் கெüசல்யா.
நிகழ்ச்சியில் மிருதுளா நாராயணன், சுவர்ணாஸ்ரீ, அனுபமா, எம்.எஸ். ஸ்ருதி, வி. ஸ்ருதி ஆகியோர் சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடினர்.
ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி வெ. கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.