அஞ்சலகத்தை மூடியதாக 50 பேர் கைது
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகக் கதவை காவிரி டெல்டா மாணவர்கள்
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகக் கதவை காவிரி டெல்டா மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புதன்கிழமை மாலை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ரயிலடியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் 50-க்கும் அதிகமான மாணவர்கள் அஞ்சலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர், அஞ்சலக வாயில் கதவை இழுத்து மூடினர். மேலும், அலுவலகம் முன் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.