இன்று முழு அடைப்பு: வணிகர் சங்கம் ஆதரவு
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைப்பது
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைப்பது என தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது, அதன்படி தஞ்சாவூர் மாநகரில் நகைக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், காய்கறி சந்தை, ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், டீ கடைகள் என அனைத்தும் இயங்காது, மேலும் தஞ்சாவூரிலும், மாரியம்மன்கோவில் பகுதியிலும் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகரத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாநில இணைச் செயலர் ரவி, அவைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.