முகப்பு
தஞ்சாவூர்

கோடை வெயிலை சமாளிக்க ஆட்சியர் அறிவுரை

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:36 am IST
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
நிகழாண்டு  கோடைகாலத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
எனவே,  தாகம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள்,  உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் துணி ஆடைகள் அணிய வேண்டும். 
வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருந்தால், பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும்,  இரவு நேரத்தில் அவற்றை விலக்கி வைத்தும் வீட்டை குளுமையாக இருக்கும் வகையில் பராமரிக்க  வேண்டும்.
மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக  சாப்பிட வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்சி,  சாத நீர்,  எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல்,  உப்பு கலந்த கஞ்சி,  பழரசங்கள் போன்றவற்றை பருக வேண்டும். 
வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து, அதற்குத் தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும் ஆகிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
செய்யக்கூடாதவை:  நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக புரதம் - மாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளைத் தவிர்க்க வேண்டும். 
சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments