தோப்புவிடுதியில் சாலை மறியல்
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட தோப்புவிடுதி கிராமத்தில் கஜா புயலின்
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட தோப்புவிடுதி கிராமத்தில் கஜா புயலின் போது ஏராளமான ஓட்டுவீடுகள், கூரை வீடுகள், தென்னை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பலரும் வீடுகள் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசின் நிவாரணப் பொருள்கள் வழங்கவில்லை எனவும், சேதமடைந்த வீடுகளுக்கான உரிய நிவாரண தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள் கிழமை தோப்புவிடுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவோணம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.