ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து: 25 பேர் காயம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 25 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 36 பேர் சுற்றுலா வேன் மூலம் வேளாங்கண்ணி கோயிலுக்கு வந்தனர். வேனை மணி (35) என்பவர் ஓட்டினார். வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பனையக்கோட்டை கயறு ஆலை அருகே வந்தபோது வேனின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த ரவிச்சந்திரன் மனைவி லெட்சுமி (60), பாலசுப்பிரமணியன் மகன் விஜயன்(52) ஆகிய இரண்டு பேர் உள்பட 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.