முகப்பு
தஞ்சாவூர்

தீ விபத்தில் உணவகம் எரிந்து சேதம்

ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகியின் உணவகம் சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.

Updated On : 5 நவம்பர் 2018, 9:18 am IST
பகிர்:

ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகியின் உணவகம் சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு யானைக்கார தெருவை சேர்ந்தவர்  ராதாகிருஷ்ணன் (50). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு பகுதியின் நகரச் செயலராக இருந்து வரும் இவர் வீட்டினருகே கூரை கொட்டகையில் உணவகம் நடத்தி வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவு உணவகத்தில் மின் கசிவால் தீப்பற்றியது. தகவலின்பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது,  கடையில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் தீ மேலும் பரவியது. இதில் கடையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் உள்பட சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments