முகப்பு
தஞ்சாவூர்

தூய அந்தோணியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா

தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2018, 9:20 am IST
பகிர்:

தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே. முகம்மது அலி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ஏ. கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார். தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கே. ஜெரோம், முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசகர் டாக்டர் பி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சைதுறை தலைவர் டாக்டர் எம்.எம். சந்திரமோகன் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி,  பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஜெ. அந்தோணிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments