வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு
ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மோகன்(33). இவரது மனைவி செல்வலட்சுமி. தாய் நல்லம்மாள் (50).
ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மோகன்(33). இவரது மனைவி செல்வலட்சுமி. தாய் நல்லம்மாள் (50). மோகன் தனது குடும்பத்தினருடன் தாய் நல்லம்மாளின் கண் அறுவை சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்ததது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.