முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:50 am IST
பகிர்:

கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பொன். கனகராஜ் , மாநில அவைத்தலைவர் சேகர்,  மாநில மகளிரணி தலைவி ஸ்ரீஜனனிமாதா,  மாநில இளைஞரணி செயலாளர் உமாபதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில்,  28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும், கண்ணார், தச்சர், கருமார், சிற்பி, பொற்கொல்லர் உள்ளிட்ட விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், கோயில்களில் தொழில்நுட்ப பராமரிப்பு சிறப்பு நிபுணர்களாக மேற்கண்ட தொழிலாளர்களை நியமனம் செய்திட வேண்டும், வங்கிகளில் கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களை வங்கி ஊழியர்களாக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. முன்னதாக, மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் வீரமுத்து, இளங்கோவன், மாநில துணைத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.