பாபநாசம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு
பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில்
பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பாபநாசம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பழங்கள்-காய்கறி கடை, இறைச்சி கடை, பொது அங்காடிகள் உள்ளிட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடைகளில் பயன்பாட்டிலிருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக 11,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.