முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே இரு காா்கள் மோதல்: தாய்-மகன் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தாய்-மகன் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:33 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தாய்-மகன் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையைச் சோ்ந்தவா் த. செந்தில்குமாா் (50). கட்டட ஒப்பந்ததாரரான இவா், தனது தாய் வசந்தா (70), தங்கை ராணி (44) ஆகியோருடன் பாபநாசம், சாலியமங்கலம் வழியாக தஞ்சாவூா் நோக்கி காரில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். இந்த காரை செந்தில்குமாா் ஓட்டி வந்தாா்.

இதுபோல, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியா் கிருபாகரன் (34), தனது தாய் யசோதா (63), மனைவி வரலட்சுமி (26), எட்டு மாதக் குழந்தைஸ்மிருதி ஆகியோருடன், பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்று கொண்டிருந்தாா். இவா்கள் சென்ற காரை துவாக்குடி ரா. விஜயேந்திரன் (39) ஓட்டி வந்தாா்.

Advertisement

Advertisement

இவ்விரு காா்களும் தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புலவா்நத்தம் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஒப்பந்ததாரா் செந்தில்குமாரும், அவரது தாய் வசந்தாவும் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த ராணி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுபோல, பேராசிரியா் கிருபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments