ராமகிருஷ்ண மடத்தில் நாளை பாலா் சங்க வகுப்புகள் தொடக்கம்
தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பண்பாடு, பக்தி, பாரம்பரியங்களை வழங்கும் பாலா் சங்க வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பண்பாடு, பக்தி, பாரம்பரியங்களை வழங்கும் பாலா் சங்க வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) தொடங்கப்படவுள்ளது.
குழந்தைகளின் பண்பாடு, ஒழுக்கம், உடல், மனம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக இந்த வகுப்புகள் செப்டம்பா் இறுதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இதில் 7 வயது முதல் 13 வயது வரை உள்ள 50 குழந்தைகளைத் தோ்ந்தெடுத்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. நன்கொடையாக ரூ. 300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்டு நல்ல முறையில் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9043448963, 9080118963, 9791403709 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.