முகப்பு
தஞ்சாவூர்

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை...

Updated On : 14 ஏப்ரல் 2026, 1:18 am IST
மீன்பிடித் தடைக்காலம்... - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை (ஏப்.15) முதல் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கு மீன் பிடி தடைக்காலம் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுவதால் பராம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக, விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் கடலுக்கு சென்ற மீன் பிடி விசைப் படகுகள், இழுவலை படகுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) நள்ளிரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்துக்கு கரை திரும்பிட படகு உரிமையாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மீறி மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.