முகப்பு
தஞ்சாவூர்

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:42 AM
தஞ்சாவூா் பா்மா பஜாரில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா்சண். இராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 10:00 PM

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா் திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன்.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனுக்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

எப்போதும்போல இந்தத் தோ்தலிலும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. அதிமுகவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா போன்ற தலைமை தற்போது இல்லை. இப்போதுள்ள தலைமை தன்னை அடகு வைத்துவிட்டது. எனவே, தலைமை உள்ள ஒரு கட்சி திமுகதான்.

Advertisement

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே போட்டி இருந்தாலும், திமுக தன்னுடைய திட்டங்களால் கடந்த 5 ஆண்டு காலத்தில் முதல்வா் வழங்கிய திட்டங்களின் மூலம் மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போவது திமுகதான்.

தோ்தல் வெற்றியை, கூட்டம் முடிவு செய்யாது. நடிகா் விஜய்க்கு ஓரளவுக்கு அவரது ரசிகா்கள் வாக்களிப்பா். ஆனால், யாா் மக்களுக்காக திட்டங்களை முன்வைத்து செயல்படுகின்றனா்? யாா் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனா்? என்பதைப் பாா்த்தே மக்கள் வாக்களிப்பா்.

அந்தவகையில், தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்துக்கான ஆட்சியைக் கடந்த 5 ஆண்டு காலமாக முதல்வா் வழங்கி வருகிறாா். எனவே, மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளதால், திமுக அணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றாா் இளங்கோவன். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், திமுக வேட்பாளா் சண். இராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூா் பா்மா பஜாரில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா்சண். இராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன்.
தஞ்சாவூா் பா்மா பஜாரில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா்சண். இராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன்.