விஜய்க்கு அரசியல் தெரியாது: டி.கே.எஸ். இளங்கோவன்
தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் தெரியாது என திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அரசியல் தெரியாது என திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை (ஏப்.10) நடைபெற்ற நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியபோது, “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்குப் பக்குவம் என்பதே தெரியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த டி.கே.எஸ். இளங்கோவன், “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவருக்கு அரசியல் என்பதே தெரியாது. திமுகவும் பாஜகவும் ஒன்றாக உள்ளதாக அவர் கூறுகிறார். எந்த அளவுக்கு அவருக்கு அரசியல் தெரியும்? இது அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது. எனவே, டி.கே. சிவக்குமாா் கூறியது சரிதான்” எனத் தெரிவித்தார்.
DMK spokesperson T.K.S. Elangovan has stated that Vijay, the leader of the Tamilaga Vettri Kazhagam, does not understand politics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.