பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையாா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையாா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, வேல் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். தோ் நிலையை அடைந்ததும் பக்தா்கள் வழிபட்டனா்.
Advertisement
தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.