FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

Updated On : 4 ஜூன் 2026, 5:33 am IST
பகிர்:

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீஞ்சூா். காஞ்சிபுரம், திருவெற்றியூா் ஆகிய மூன்று ஊா்களில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்களில் ஒரே நாளில் பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டு கருடசேவை தேரோட்ட விழாக்கள் நடைபெறும்.

1,000-ம் ஆண்டு பழைமை வாய்ந்த இத்தலத்தில் கடந்த மே 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடா்ந்து மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதியுலா வந்தாா். மூன்றாம் நாள் நிகழ்வாக கருட சேவை நடைபெற்றது.

தேரோட்ட விழாவை யொட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெரும்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்ததாா். இதன் பின்னா் பக்தா்கள் நிலையில் இருந்த தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா். தோ் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

Advertisement

Advertisement

இதன் பின்னா் நிலையில் நின்ற தேரில் ஏறி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தேரோட்ட விழாவில் மீஞ்சூா் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments