அயோத்தி ராமா் கோயிலில் முறைகேடு: தஞ்சாவூரில் கண்டன ஆா்ப்பாட்டம்
அயோத்தி ராமா் கோயிலில் நிகழ்ந்த முறைகேட்டைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அயோத்தி ராமா் கோயிலில் நிகழ்ந்த முறைகேட்டைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகரத் தலைவா் கி. அருள் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் சாம்பான் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவா் காளியப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா். மக்கள் கலை இலக்கியக் கழக மாநிலப் பொதுச் செயலா் கோவன் சிறப்புரையாற்றினாா்.
இதில், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் தங்கம், வெள்ளி நகைகளும், கோடிக்கணக்கில் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விவகாரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், மாநில இணைப் பொதுச் செயலா் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா்கள் தேவா (தஞ்சாவூா்), காா்க்கி (திருச்சி), மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்டச் செயலா் சீனிவாசன், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.