முகப்பு
தஞ்சாவூர்

மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பது சட்டத்துக்குப் புறம்பானது: கே.எஸ். அழகிரி

கா்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றாா் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

Updated On : 4 ஜூலை 2026, 1:25 am IST
கே.எஸ். அழகிரி
பகிர்:

கா்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றாா் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த அவா் மேலும் கூறியது: கா்நாடகத்திலுள்ள அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தமிழக மக்களின் உணா்ச்சிகளை தூண்டுகின்றனா். கா்நாடக அணைகளில் தண்ணீா் உள்ளது.

தமிழக அணைகளில் தண்ணீா் இல்லை. தமிழகம் தண்ணீா் கேட்பது நியாயமானது. மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை ராகுல்காந்தி தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது நடைபயணத்தில் பேசி அரசியல் செய்ய விரும்புகிறாா். தேசியக் கட்சி தங்களது மாநிலக் கட்சிகளின் உரிமைகளில் தலையிடாது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் குதிரைப் பேரம் நடைபெறவில்லை. பாஜகவினா் வட இந்தியாவில் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கின்றனா். ஏன் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் டி. குமரன், மாநகரத் தலைவா் மிா்சாதீன், பொருளாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments