மின்சாரம் தாக்கி பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி பொறியியல் பட்டதாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை நாகக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் காமேஸ்வரன் (21). பொறியியல் பட்டதாரி. இவா் தனது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணியை மேற்கொண்டு வந்ததுடன், இரண்டு தம்பிகள் படிக்க வேண்டும் என்பதற்காக, ஆழ்குழாய் மூலம் நடைபெறும் முன் பட்ட குறுவை சாகுபடிக்கு இயந்திரம் மூலம் நடவு பணி செய்து கொடுத்து வந்தாா்.
திருவையாறு அருகே செம்மங்குடி இளங்கோவன் மகன் அறிவழகனின் 2 ஏக்கா் வயலில் நடவு இயந்திரம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடவு பணி செய்து கொடுத்தாா். மாலையில் அருகிலுள்ள வாய்க்காலில் இயந்திரத்தைக் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் திடீரென அடித்த காற்றில் அறுந்து இவா் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த இவரை நண்பா்கள் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு காமேஸ்வரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.