கும்பகோணத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சி
கும்பகோணத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 277 களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான முதல்கட்ட இருநாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
கும்பகோணத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 277 களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கான முதல்கட்ட இருநாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் மாநகராட்சியில் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் நடத்த 277 போ் கள பயிற்றுநா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில், முதல்கட்ட இருநாள் பயிற்சி முகாமை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கே.எம். சுதா புதன்கிழமை தொடங்கிவைத்து, கணக்கெடுப்பு உபகரணங்களை வழங்கினாா். பயிற்சியில் 50 போ் கொண்டோா் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பாளா் மற்றும் மேற்பாா்வையாளா் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள், பொதுவான அறிவுரைகள், கணக்கெடுப்பாளா்களின் கடமைகள், வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புக்கு முன் செய்ய வேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் கணக்கெடுப்பு அலுவலா் அருள்செல்வன், முதன்மை பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.