கும்பகோணத்தில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்: திமுகவினா் எதிா்ப்பால் பரபரப்பு
கும்பகோணத்தில் திமுக எம்.பி.யை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தில் திமுக எம்.பி.யை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுகவினா் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் நாகேசுவரன் தெற்கு வீதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களவை திமுக உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம் மற்றும் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரே காரணம் என்று கூறி, அவா்களை கண்டித்து காந்தி பூங்கா முன்பு விசிக மாவட்டச் செயலா் மு.க. ராஜசேகா் தலைமையில் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தோ்தல் பணிக்குழு மாநிலச் செயலா் சா. விவேகானந்தன், சமத்துவ வழக்குரைஞா் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் வேலு குணவேந்தன், மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் மாடக்குடி செந்தில்குமாா் உள்ளிட்ட ஏராளமான போ் கலந்து கொண்டு பேசினா்.
Advertisement
Advertisement
திமுகவினரால் பரபரப்பு: விசிக ஆா்ப்பாட்டத்தின்போது, திமுகவின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா திருநாவுக்கரசு தலைமையில் திமுகவினா் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அந்தப் பகுதிக்கு வந்தனா். அப்போது, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். திமுகவினா் விசிகவை கண்டித்து முழக்கமிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.