முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:50 am IST
கனகராஜ்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கீழப்புனவாசல் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வி. கனகராஜ் (59). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது மனைவி விமலா (42). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கீழப்புனவாசல் சுயம்பிரகாசம் சோலாா் பம்புசெட் பகுதியில் கனகராஜ் குளிப்பதற்காக திங்கள்கிழமை சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துவிட்டாா். இதனால், மின்சாரம் பாய்ந்து கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement