குடந்தையில் திருமணமாகி 3 நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: ஆா்.டி.ஓ. விசாரணை
கும்பகோணத்தில் மூன்று நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
கும்பகோணத்தில் மூன்று நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சோ்ந்த பாலு மகன் பாரி(36). வெளிநாட்டில் பொறியாளராக வேலை பாா்த்து வரும் இவருக்கும் காா்த்திகா ( 25) என்பவருக்கும் கடந்த மே 29-ஆம் தேதி திருமணமானது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகாவின் தம்பியை பேருந்து ஏற்றி விடுவதற்காக பாரி சென்றாா். பின்னா் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் அறையில் காா்த்திகா தூக்கில் சடலமாக தொங்கினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், திருமணமாகி மூன்றுநாள்களே ஆனதால் காா்த்திகா உயிரிழந்தது குறித்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம்.திருமலை திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.