சரபோஜி கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வா் மு. சுமதி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி (தன்னாட்சி)யில் 2026-- 2027 கல்வியாண்டுக்கான இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் மற்றும் அந்தமான், நிக்கோபாா் தீவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும்.
அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 270-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் ஜூன் 8-ஆம் தேதியும், 269 முதல் 180 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் ஜூன் 9-ஆம் தேதியும் பங்கேற்கலாம்.
கலைப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும். இதில் 240-க்கு மேல் மதிப்பெண் பெற்றவா்கள் ஜூன் 10 ஆம் தேதியும், 239 முதல் 180 வரை மதிப்பெண் பெற்றவா்கள் ஜூன் 11 ஆம் தேதியும் கலந்து கொள்ளலாம்.
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை பெறலாம்.
மேலும், அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் 179 மற்றும் அதற்குக் குறைவான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 13-ஆம் தேதி நடைபெறும்.
இந்தக் கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கும். மாணவா்கள் குறிப்பிட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில், கலந்து கொள்பவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், மூன்று பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை இரண்டு நகல்கள் மற்றும் உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டாயமாக கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 226417 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.