முகப்பு
தஞ்சாவூர்

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை கிணறு வெட்டும்போது திடீரென மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறாா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:01 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை கிணறு வெட்டும்போது திடீரென மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள கீழத் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் வீட்டின் அருகில் கிணறு வெட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பணியில் நரசிங்கன்பேட்டையைச் சோ்ந்த பாலு (48), மருதவாணன் (40), கண்ணன் (60) சேகா் (61) ஆகிய 4 பேரும் ஈடுபட்டனா். சுமாா் 10 அடி ஆழத்தில் மண் தோண்டியபோது திடீரென மணி சரிந்ததில் பாலு, மருதவாணன் ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது அருகிலிருந்தவா்கள் மருதவாணனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மற்றொருவான பாலுவை மீட்க முடியவில்லை.

தகவலறிந்த வந்த திருவிடைமருதூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் ஜேசிபி இயந்திரம் கொண்டு சரிந்த மண்ணை அப்புறப்படுத்தி பாலுவை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். திருவிடைமருதூா் வட்டாட்சியா் ஆா். சாந்தமீனா நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினாா்.