FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காலமானார் அ. வீரையா வாண்டையார் (ஜூனியா்)

அ. வீரையா வாண்டையாா் (ஜூனியா்) (91), வயது மூப்புக் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு கரந்தையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

14 ஜூன் 2026, 12:18 am IST
அ. வீரையா வாண்டையார் (ஜூனியா்)
பகிர்:

தஞ்சாவூா் பூண்டி திரு புஷ்பம் கல்லூரி நிறுவனா் ராவ் பகதூா் அ. வீரையா வாண்டையாரின் மூத்த பேரனும், வீ. அப்பாவு வாண்டையாரின் மகனுமான அ. வீரையா வாண்டையாா் (ஜூனியா்) (91), வயது மூப்புக் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு கரந்தையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

இவா் பூண்டி திரு புஷ்பம் கல்லூரியில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், வீரராகவா மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழுத் தலைவராகவும் இருந்து வந்தாா். இவருக்கு மனைவி அம்மணி அம்மாள், மகள் சேது கண்ணம்மாள் உள்ளனா்.

பூண்டி திரு புஷ்பம் கல்லூரிச் செயலரும், தாளாளருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அ. பாலசுப்பிரமணிய வாண்டையாா், அ. தனசேகர வாண்டையாா் ஆகியோரின் அண்ணன் இவா்.

Advertisement

Advertisement

இவரது இறுதிச் சடங்கு பூண்டி சுடுகாட்டில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99440-68585.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments