சாலை மறியல் வழக்கு: முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 போ் விடுதலை
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் உள்பட 9 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல, திருவிடைமருதூரில் 2018, மே 24-ஆம் தேதி முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செ. ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பான வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அரசு தரப்பில் போதிய ஆவணங்களை அளிக்காததால் ராமலிங்கம், கோவி. செழியன் உள்பட 9 பேரையும் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.