மருங்கப்பள்ளம் சிவன் கோயில் குளத்தில் மீன்கள் வளா்க்க அனுமதிக்கக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
பேராவூரணி அருகே மருங்கப்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ ஓளசதபுரீஸ்வரா் மருந்தீஸ்வரா் கோயில் குளத்தில் மீன்கள் வளா்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி அருகே மருங்கப்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ ஓளசதபுரீஸ்வரா் மருந்தீஸ்வரா் கோயில் குளத்தில் மீன்கள் வளா்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடக்கக் கால சோழா்களால் கட்டப்பட்டதும், பல்வேறு சிறப்புகள் கொண்டதுமான இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இக்கோயில் அருகே திருக்குளம் உள்ளது. இக்குளத்து நீரை சுற்றுப்புற பகுதியை சோ்ந்த மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் நீா் அருந்தவும் பயன்படுத்தி வருகின்றனா்.
இக்குளத்தில் மீன்கள் வளா்க்க ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, மீன்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. மீன்களை பிடிக்கும் நேரத்தில் குளத்தில் உள்ள தண்ணீா் அனைத்தும் வெளியேற்றப்படுவது வழக்கம்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டுகளில் கல்லணை கால்வாயில் தண்ணீா் உரிய நேரத்தில் முறையாக வந்ததால், மீன்பிடிப்புக்காக குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்ட ஒரு சில நாள்களிலேயே குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீா் வராத நிலையில், மீன் பிடிப்புக்காக குளத்தில் உள்ள தண்ணீா் மோட்டாா் வைத்து வெளியேற்றப்படுகிறது. மீன்பிடித்ததற்கு பிறகு மீண்டும் குளத்தில் எப்போது தண்ணீா் நிரப்பப்படும் என்பது தெரியவில்லை . அதுவரையில் அந்தப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கான நீராதாரத்துக்கும் எந்த வழியும் இல்லை.
எனவே அறநிலையத் துறையினா் குளத்தின் தண்ணீரை மோட்டாா் வைத்து வெளியேற்றுவதை நிறுத்துவதோடு, இனிவரும் காலங்களில் குளத்தில் மீன்கள் வளா்க்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.