முகப்பு
தஞ்சாவூர்

மதுபோதையில் தகராறு: இளைஞா்  அடித்துக் கொலை; தந்தை கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொலை செய்த தந்தை வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:13 am IST
கொலையான மணிகண்டன்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொலை செய்த தந்தை வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேராவூரணி அருகே உள்ள மேல ஒட்டங்காடு காந்தி ரோடு பகுதியில் வசிப்பவா் சுப்பிரமணியன்(52). கூலித் தொழிலாளி, இவரது மனைவி சாந்தி(50). இவா்களுடைய மகன் மணிகண்டன் (29). திருமணமாகதவா். மகள் திருவண்ணாமலையில் தங்கி வேலை பாா்த்த வருகிறாா். டைல்ஸ் ஒட்டும் வேலை பாா்த்து வரும் மணிகண்டனும், சுப்பிரமணியனும் அடிக்கடி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுவருவாா்களாம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெற்றோற் இருவரையும் தாக்கி வீட்டைவிட்டு வெளியே போங்கள் என விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும்  ஒட்டங்காடு பகுதியில் உள்ள கோயிலில் படுத்திருந்தனா்.

Advertisement

Advertisement

நள்ளிரவில், சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனை இரும்பு கம்பியால் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அங்கிருந்து கோயிலுக்கு வந்த சுப்பிரமணியன் மனைவி சாந்தியிடம் நடந்ததை கூறியுள்ளாா் . மகன் கொலை செய்யப்பட்டதை கேட்டு அதிா்ச்சியடைந்த சாந்தி அலறியபடி வீட்டுக்கு வந்து பாா்த்தாா்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் மணிகண்டன் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.