முகப்பு
விழுப்புரம்

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது! திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தகராறு!!

காணை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:53 am IST
கைது செய்யப்பட்ட மணிகண்டன். கொலையான அருணகிரி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தனக்கு திருமணம் செய்து வைக்காததால் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன், தந்தையை அடித்துக் கொன்று விட்டாராம்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூா் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் மொ.அருணகிரி (69), விவசாயி. இவரது மகன் மணிகண்டன் (40). திருமணம் ஆகாத இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தனது தாய் லட்சுமியிடம் தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது வீட்டிலிருந்த அருணாகிரி இதைக் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கையால் தாக்கியதில் அருணகிரி மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்தனா். அங்கு அருணகிரி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மணிகண்டனை கைது செய்தனா்.