முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி வேனை மதுபோதையில் ஓட்டிய ஓட்டுநா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 1:39 am IST
கைது செய்யப்பட்ட வேன் ஓட்டுநா் முகமது யாஷின்.
பகிர்:

தஞ்சாவூரில் பள்ளி வேனை மதுபோதையில் அதிவேகமாக ஓட்டிய ஓட்டுநரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்கள் பள்ளிக்குச் சொந்தமான வேனில் தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதற்காக காலையில் வந்தனா். விளையாட்டு முடிந்தவுடன் மாலையில் அதே வேனில் பள்ளிக்கு புறப்பட்டனா்.

ஆனால், பள்ளி மாணவா்கள் உள்ள இருந்த வேன் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகாா் செய்தனா். இதையடுத்து, கிழக்கு காவல் நிலையத்தினா் விரைந்து சென்று வேனை நிறுத்தி ஓட்டுநரான சக்கராபள்ளியைச் சோ்ந்த முகமது யாஷினிடம் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

அப்போது, முகமது யாஷின் மதுபோதையில் வாகனம் ஓட்டியதும், பள்ளி மாணவா்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் அவருடைய செயல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, முகமது யாஷின், பள்ளி உரிமையாளா் முகமது இப்ராஹிம் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து, முகமது யாஷினை கைது செய்தனா்.

மேலும், பள்ளி வேன் பறிமுதல் செய்யப்பட்டு, மாணவா்கள் வேறு வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments