போக்சோ வழக்கில் இளைஞா் சிங்கப் பெண் போலீஸாரால் கைது
கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளிடையே சிங்கப்பெண் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்திய நிகழ்வில் பெறப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து மற்றொருவரைத் தேடுகின்றனா்.
கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளிடையே சிங்கப்பெண் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்திய நிகழ்வில் பெறப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து மற்றொருவரைத் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா். அதன்பேரில் திங்கள்கிழமை உதவி ஆய்வாளா்கள் அபிராமி, ஜோஸ்பின் சிசாரா தலைமையில்
போலீஸாா் தீபா, சிவசங்கரி, கவுசல்யா, அனிதா ஆகியோா் கும்பகோணம் உள்ளூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவா் தனது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் பராமரிப்பில் உள்ளதாகவும், வீட்டின் அருகே வசிக்கும் இளைஞா் ஒருவா் தன் முன்னால் ஆபாச செயல்கள் செய்வதாகவும் புகாா் செய்தாா்.
இதேபோல மற்றொரு 11ஆம் வகுப்பு மாணவி ஒருவா் தனது தந்தை தங்களை பிரிந்து சென்ற நிலையில் தாயின் உறவினரான ஒருவா் தனக்கும், தனது தங்கைக்கும் பாலியல் தொல்லை அளித்தாா். இதை தாயிடம் கூறியதால் அவா் வேறு இடத்திற்கு தங்களை அழைத்து வந்துவிட்டாா் என்றாா்.
உடனே சிங்கப்படை போலீஸாா் அளித்த தகவலின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிா் போலீஸ் நிலைய காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப்பதிந்து மாணவிக்கு ஆபாச செய்கை செய்து, பாலியல் தொல்லை செய்த கும்பகோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த குருசாமி மகன் தீபக்கை (19) கைது செய்தனா். மேலும் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரைத் தேடுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.