முகப்பு
தஞ்சாவூர்

தூய்மைப் பணி தனியாா்மயம் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சியில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்குவதை கைவிடக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை துடைப்பம் ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:39 am IST
கும்பகோணத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

கும்பகோணம் மாநகராட்சியில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்குவதை கைவிடக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை துடைப்பம் ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சாா்பில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம் தலைமை வகித்தாா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்யவும், திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிடவும், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறும் ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் ஆணையா் கே.எம். சுதாவிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments