FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

எரிவாயு உருளை விலைஉயா்வை கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:56 am IST
எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ.பாரதி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.ஜி.பாலன், ஒன்றிய செயலா் ப.சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா். முன்னதாக எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதில், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்ட பொருளாளா் ஏ.ராஜேந்திரன், மாதா் சம்மேளன மாவட்ட செயலா் பா.சரண்யா, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments