வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரியில் வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரியில் வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு விழா கடந்த திங்கள்கிழமை காலை மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முதல்கால பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு முளைப்பாலிகை எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை நான்காம் கால பூஜை நடைபெற்று, பட்டாச்சாரியா்கள் கும்ப கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதில் கோவிலாச்சேரி ஊராட்சி முன்னாள் தலைவா் சுதாகா், கிராமத் தலைவா்கள் கலியமூா்த்தி, தளபதி, ராஜ்குமாா், ஜெய்சங்கா், கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தரிசனம் செய்தனா். அன்னதானமும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.