மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது
தஞ்சாவூரில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போனது தொடா்பான விசாரணைக்கு நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில் ஆய்வாளா் வி. சந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில், தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் எழுத்துக்காரத் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ஸ்ரீதா் (34) தஞ்சாவூா் தெற்கு, மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலைய எல்லைகளில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்ரீதரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.