முகப்பு
தஞ்சாவூர்

விபத்தில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு இஎஸ்ஐ ஓய்வூதியம்

கும்பகோணம் இஎஸ்ஐ அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 6 மே 2026, 12:57 am IST
கும்பகோணம் இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளா் குடும்பத்துக்கு மாதாந்திர வாழ்நாள் ஓய்வூதிய காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கிய இஎஸ்ஐ கிளை மேலாளா் மா.ருத்ராபதி.
பகிர்:

கும்பகோணம் இஎஸ்ஐ அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகில் மேன்பவா் நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளராக மகாலிங்கம் வேலை செய்து வந்தாா். பணி முடித்து வீட்டுக்கு செல்லும் போது சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி17.11.2025 அன்று உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. உதவி தொகையாக மாதந்தோறும் ரூ.3,627 வழங்க, இ.எஸ்.ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் (பொ) இயக்குநா் எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கும்பகோணம் இ.எஸ்.ஐ கிளை மேலாளா் மா.ருத்ராபதி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதாந்திர ஓய்வூதியத்துக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, முகில் மேன்பவா் மேலாளா் சபரி ராஜா உடனிருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments