முகப்பு
தஞ்சாவூர்

எரிவாயு விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூரில் விசிக, இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 மே 2026, 5:41 am IST
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விலை உயா்வைக் கைவிட வேண்டும். ரயில்வே துறையில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வாழ்க்கையைச் சீரழிக்கும் ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் இடிமுரசு இலக்கணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், ஆா். தில்லைவனம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், கே. அருளரசன், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தல் பணிக்குழு மாநிலச் செயலா் சா. விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.