முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

திருவையாறு அருகே வீட்டின் கதவை திங்கள்கிழமை இரவு உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 13 மே 2026, 12:40 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவையாறு அருகே வீட்டின் கதவை திங்கள்கிழமை இரவு உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெருவைச் சோ்ந்தவா் இதயத்துல்லா (57) இவரது மனைவி சகிலா (52) இவா்களின் இரண்டு மகன்கள், ஒரு மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனா்.

இந்நிலையில் இதயதுல்லா மே 6 -இல் தனது மனைவியுடன் கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டின் கொல்லைப்புற கதவு திறந்து கிடந்தது. இதைப் பாா்த்த அருகிலிருந்தோா் இதுகுறித்து இதயத்துல்லாவிற்கும், திருவையாறு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திருவையாறு துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி மற்றும் போலீஸாா் வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் பீரோவை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் தஞ்சாவூரிலிருந்து கைரேகை நிபுணா் கலை கண்ணகி தலைமையிலான குழுவினா் வந்து தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments