சேதுபாவாசத்திரம், பேராவூரணியில் நாளை மின்நிறுத்தம்
சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணியில் சில பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம் , மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம் , பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ஆத்தாளூா், பேராவூரணி சேது ரோடு , அண்ணாநகா், முனீஸ்வரா் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.