தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், மாநில அமைப்புசாரா தொழிலாளா் அணி தலைவா் சொா்ணலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.
இதேபோல, ரயிலடியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஜி. லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், வடிவேலு, கண்ணன், செந்தில் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பின்னா் அமைச்சரவையில் காங்கிரஸ் பொறுப்பேற்றதையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேல வீதியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். இதில், ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், ஊடகப் பிரிவு தலைவா் பிரபு, மாவட்டச் செயலா் கவிதா ஞானபிரகாசம், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.